மேஷம் (Mesham)

Ariesமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பிரபலமானவர்களின் சந்திப்பும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை கூடும். பொருளாதார சிக்கல்கள் விலகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். மனதில் சந்தோஷம் நிம்மதியும் கூடும். புதிய முயற்சிகள் யாவும் இனிதே நடைபெறும். வீட்டில் வீண் செலவுகளும், மருத்துவ செலவுகளும் இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சொந்த வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்ய வேண்டிவரும். குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். கடன் பிரச்சனைகள் பெரியளவில் பாதிக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகம் போராட வேண்டியிருக்கும். பிறருக்கு ஜாமின் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவு செய்யவும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி இருக்கும். சந்திராஷ்டமம் : ஜனவரி 19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

December

குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்து வந்த குருபகவான் 29-10-2019 முதல் 9-ம் இடத்திற்கு செல்கிறார். 9-ம் இடமான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு பல ஏற்றங்களை வழங்க போகிறார். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக செயல்பட தோன்றும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான தீர்வு காண முடியும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல் பட முடியும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குல தெய்வ வழிபாடு குலத்தை காக்கும். தெய்வத்தின் அருளால் எல்லா காரியத்திலும் எளிதில் வெற்றி பெற கிடைக்கும். குடும்ப வருமானம் தானாக உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அரவணைப்பை பெற முடியும். விலகி நின்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் உறவினர்களின் ஒத்துழைப்பால் கைகூடி வரும். கையில் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாற்றங்கள் ஏற்றங்களை தரும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். உங்கள் ஆற்றலையும், திறமையும் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உறவினர்கள் சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர். தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களை கூட எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பூர்விக சொத்து பிரச்சனைக்கு தீர்க்க கிடைக்கும். சொந்த வீடு கனவு நினைவாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் ஏற்படும். நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதம் மறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். இந்த குரு பெயர்ச்சியில் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் குருவால் அபரிதமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்

இராசி உறவு நிலைகள்

மேஷ ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம். அவர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், கன்னி மற்றும் மகரம்.

சிறப்பான தொழில்

மேஷ ராசிக்காரர்கள் இலட்சியம், உறுதி, இயக்க நிலை மற்றும் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். வெளியிடங்களுக்கு சென்று வருதல், ஆக்டிவாக இருப்பது போன்றவற்றில் துடிப்புடன் இருக்கும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையில் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும். ஏனெனில் மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)